ஓசூர் அருகே சரக்கு ரயிலின் 4 சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து 52 காலி பெட்ரோல் டேங்கர்கள் இணைக்கப்பட்ட சரக்கு ரயில் ஒன்று ஓசூர் வழியாக சேலத்திற்கு சென்றுகொண்டிருந்தது. ஓசூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயிலின்18 வது டேங்கரின்
4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புறண்டு கீழே இறங்கியது. இது குறித்து தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.