House | Encroachment |40 ஆண்டாக வாழ்ந்த மண்.. கண்முன்னே சுக்குநூறான சொந்த வீடு - கதறி அழுத ஓனர்கள்

Update: 2025-08-08 06:31 GMT

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10 வீடுகள் அகற்றம் - கதறி அழுத உரிமையாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அறநிலையத்துறையின் இடத்தில் கட்டப்பட்ட 10 வீடுகள்

இடித்து அகற்றப்பட்டன. சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், JCB மூலம் வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடுகளை, இடித்து அகற்றியதால் மக்கள் கண்ணீர் வடித்தனர். மேலும் மாற்று இடம் வழங்காவிடில் தீக்குளிப்போம் என பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்