பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற மாநில வள மைய திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதிநேர ஆசிரியர்களை அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர்களைக் கடந்து சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்ட ரீதியிலான ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.