Parliament | Om Birla | "MP-க்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே.." - அதிரடியாக அறிவித்த ஓம் பிர்லா

Update: 2026-01-21 09:27 GMT

“எம்.பிக்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே இனி வருகை பதிவு“

எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து, மக்களவை உறுப்பினர்கள் அவைக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே வருகை பதிவு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 86வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். இதன் மூலம் அவைக்கு வெளியில் வருகை பதிவு செய்யும் பழைய நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் உறுப்பினர்களின் செயல்பாட்டை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்