Puducherry | புதுச்சேரியில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய ல.ஜ.க. தலைவர்

Update: 2026-01-21 10:58 GMT

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு பல்வேறு கட்டங்களாக லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரெய்ன்போ நகர், சுதந்திர பொன் விழா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரஷர் குக்கர், மிக்சி, மின் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் துரைசாமி, பிரபாகரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், மண்டல பொதுச் செயலாளர் விஜய்ராஜ், மாநில செயலாளர் ரவி ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்