Pondycherry | புதுச்சேரியில் இந்த மூன்று மாத்திரைகள் விற்க தடை.. அதிரடி உத்தரவு
போலி மருந்து விவகாரத்தின் எதிரொலியாக, தரமற்றதாக கண்டறியப்பட்ட மூன்று மாத்திரைகளின் விற்பனைக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் சப்ளை செய்த விவகாரம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், தரமற்றதாக கண்டறியப்பட்ட ஹிமாச்சலின் நோனிஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் மாக்பான்சோ 40, கேரளாவின் அபான் பார்மாசூட்டிக்கல் தயாரித்த பெபாவிட் 650, ராஜஸ்தானின் கார்னானி பார்மாசூட்டிக்கல் தயாரித்த சங்காவதி ஆகிய மூன்று மாத்திரைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. மருந்து கடைகளில் உள்ள இருப்புகள் குறித்து மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு தெரிவிக்கவும், மீதமுள்ள மருந்துகளை தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.