Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.01.2026) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2026-01-21 01:00 GMT
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்தார்... தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, அரசின் உரையை படிக்காமல் ஆளுநர், வெளிநடப்பு செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
  • தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது... மறைந்த ஏ.வி.எம். சரவணன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது...
  • ஆளுநர் உரை அவையில் படிக்கப்பட்டதாக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்... முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது...
  • தமிழகத்தில் பெண்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்... இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழகம் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்...
  • அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம், இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது...
Tags:    

மேலும் செய்திகள்