Government Doctors | Surgery | ``லேசா பிசகினாலும் உத்தரவாதம் இல்ல’’ - மிக ஆபத்தான சர்ஜரி..

Update: 2026-01-21 02:54 GMT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், முதுகுத்தண்டு வளைவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஸ்கோலியோசிஸ் எனப்படும் அரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் காயத்தாறையை சேர்ந்த 25 வயதான கனகலட்சுமி என்பவருக்கு பிறவியிலேயே முதுகுத்தண்டு வளைந்து முதுகுவலி மற்றும் சுவாச பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சையில் இருந்த அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 பேருக்கு, இதுபோன்ற ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்