சென்னை சாந்தோம் கடற்கரையில் ஆலிவ் ரெட்லி வகை கடல் ஆமைகள், முட்டையிடுவதற்காக இந்த காலகட்டத்தில் கரை நோக்கி வருவது வழக்கமான ஒன்று.
ஆனால் தற்போது இறந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் கரை ஒதுங்கி கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தோம் மட்டுமின்றி கடற்கரையின் பல பகுதிகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் கூறினர்.