"அட்டாக்.." - முரண்டுபிடித்த ஆளுநர்.. தானே செய்து முடித்த பினராயி..

Update: 2026-01-20 16:20 GMT

கேரள சட்டசபை கூட்டத் தொடரில் மாநில அரசின் அறிக்கையில் சில அம்சங்களை அம்மாநில ஆளுநர் வாசிக்க மறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. பேரவை தொடங்கிய உடன், ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர் கேரள அரசு தயாரித்த கொள்கை உரையை வாசித்தார்... ஆனால் மத்திய அரசுக்கு எதிரான சில வாக்கியங்களை அவர் வாசிக்கவில்லை. அதன் பிறகு முதல்வர் பினராயி விஜயன் ஆளுநர் வாசிக்காமல் விட்ட வாக்கியங்களை வாசித்தார். ஆளுநரால் வாசிக்கப்படாத பத்திகள் மத்திய அரசையும் ஆளுநரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சித்தவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்