TodayGoldRate | வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் விலை நிலவரம்
கிராம் ரூ.15 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை! நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவரும் ஆபரணத் தங்கம், கிராம் 15 ஆயிரத்தை நோக்கி, ஜெட் வேகத்தில் செல்வது குறித்து பார்க்கலாம். கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் மல்லுக்கட்டும் வேளையில், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14 ஆயிரத்து 415 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது. சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. புதன் கிழமை காலை 3 மணி நேரத்திற்குள் 2 முறை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. செவ்வாய் கிழமை கிராம் 13 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்ற தங்கம் கிராம் 14 ஆயிரத்து 415 ரூபாயாகவும், சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு 515 ரூபாயும், சவரனுக்கு 4 ஆயிரத்து 120 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. 2025ஐ போலவே... 2026-ம் ஆண்டிலும் தங்கம் விலை உயர்வு ராக்கெட் வேகத்தில் செல்கிறது.