குதித்து குதித்து டான்ஸ் ஆடிய குதிரைகள்.. களைகட்டிய தூக்குத்தேர் திருவிழா
தூக்குத்தேர் திருவிழா கோலாகலம் - நடனமாடிய குதிரைகள்
ஈரோடு அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா களைகட்டியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மேள தாளத்துடன் பக்தி கோஷம் முழங்க தேரை தூக்கி சென்றனர்.
இதனிடையே, அங்கு நடைபெறும் புகழ்பெற்ற குதிரை சந்தையில் மேளதாளத்திற்கு ஏற்ப குதிரைகள் போட்ட ஆட்டம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.