"சாதி இல்லைன்னு ஏன் சொல்லி கொடுக்கிறீங்க.." | மனம் நொந்து சமையலர் கேட்ட கேள்வி

Update: 2025-12-21 14:57 GMT

சாதிய பாகுபாடு - சமைக்கவிடாமல் தலைமை ஆசிரியர் தடுப்பதாக புகார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, பட்டியலின பெண்னை சமைக்கவிடாமல் தலைமை ஆசிரியர் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

சின்னரெட்டியப்பட்டி அரசு பள்ளியில் பெற்றோர்கள் எதிர்ப்பதாகக்கூறி, தலைமை ஆசிரியர் தன்னை சமையல் செய்ய விடாமல் தடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சமையல் செய்து வந்ததாகவும், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திடீரென சமையலர் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்