சிவகங்கையில் கோர கொலை.. 3 கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் -இப்படியொரு கொடூர காரணமா?
சிவகங்கை மாவட்டம் வேலடிமடை கிராமத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அறுவடை இயந்திரத்தில் வேலை பார்த்து வந்த மகேஷ், நவின் என்ற இருவரையும், மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் மகேஷ் உயிரிழந்தார். இந்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான சிம்பு, கருப்பு மற்றும் ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், நவீனின் பைக்கை திருட வந்த போது அதை தடுக்க வந்ததால், மகேஷை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.