நாகையில் காலாவதியான பாஸ்போர்ட் பயன்படுத்தி கப்பலில் வெளிநாடு பயணம் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் இந்தியாவை சேர்ந்த இருவர் பிடிபட்டனர்.நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சென்ற கப்பலில் பயணம் மேற்கொண்ட இந்தியா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 85 பயணிகள் இமிகிரேஷன் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது கப்பலில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை இலங்கை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசோ மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய இருவர் காலாவதியான கடவுச்சீட்டில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.