தொடர் விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து, பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீனவர்கள், சமையலர்கள், வியாபாரிகள் போதிய வருவாய் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.