சரித்திர பதிவேடு குற்றவாளி கணேஷ் துடிதுடிக்க வெட்டிக் கொலை - பல்லாவரத்தில் பயங்கரம்

Update: 2025-08-24 07:30 GMT

சரித்திர பதிவேடு குற்றவாளி சரமாரியாக வெட்டிக் கொலை

பல்லாவரம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியை சமாதானம் பேசுவது போல் நைசாக அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியான கணேஷ் என்பவரை கட்டபொம்மன் தெருவிற்கு வரவழைத்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள், கணேஷை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்