பட்டா கத்தியுடன் விரட்டிய கூலிப்படை- அலறி ஓடிய மக்கள்

Update: 2025-07-14 05:04 GMT

பட்டாக் கத்தியுடன் விரட்டிய கூலிப்படை- அலறி ஓடிய கிராம மக்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கூலிப் படையினர் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

கைலாசப்பட்டியில் பெருமாள் என்பவர், தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆயுதங்களுடன் வந்த கூலிப்படையினர், அவரை அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் ஆயுதங்களுடன் நாலாபுறமும் பொதுமக்களை விரட்டிச் சென்றதால், அவர்கள் பதறி அடித்து ஓடி ஒளிந்து கொண்டனர். பெருமாளின் உறவினர் செல்வம் என்பவரையும் அந்த கும்பல் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் சாமதானப்படுத்தினர். அப்போது, கைலாசப்பட்டியை சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இழுப்பதாக போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பெருமாள், செல்வம் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்