Kanyakumari News | சொந்த பேத்தியையே சீரழித்த கிழட்டு மிருகத்துக்கு நரக தண்டனை
9 வயது பேத்தி பாலியல் வன்கொடுமை - தாத்தாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாத்தாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குலசேகரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர், தனது 9 வயது பேத்தியை கடந்த 2023ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தாய் அளித்த புகார் அடிப்படையில், சிறுமியின் தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாத்தாவுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.