கிருஷ்ணகிரியில், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த கோரி மாணவிகள் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் மகேந்திரனின் பணியிட மாற்றத்தை எதிர்த்து, பள்ளி மாணவிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கண்ணீருடன் கோஷங்களை எழுப்பிய மாணவிகளை தலைமை ஆசிரியர் சமாதானம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.