18 பவுனுடன் நடமாடிய மளிகைக் கடைக்காரர் மனைவியோடு கழுத்தறுத்து கொலை

Update: 2025-05-12 02:33 GMT

மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கழுத்தறுத்து கொலை

சேலம் அருகே மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் அணிந்திருந்த 18 சவரன் நகைகள் காணாமல் போன நிலையில், நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என்று அவர்களின் மூத்த மகன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும் இப்பகுதியில் சாராயம் மற்றும் கஞ்சா சர்வ சாதரணமாக கிடைப்பதாகவும், இதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்