"கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கம்"
கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயற்கை நுண்ணறிவு குறித்து தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி .செழியன் தெரிவித்தார் உயர்கல்வித்துறை சார்பில் சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி .செழியன் கலந்து கொண்டு கிராமபுற மாணவர்களும் அனைத்து அறிவுசார்ந்த விஷயங்களையும் அறிந்து கொள்வதற்காக இது போன்ற கருந்தரங்குகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஏழாம் வகுப்பில் இருந்து தொழில்நுட்பம் குறித்த பாடத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.