கணிக்க முடியாத தங்கம் விலை.. இன்றைய திடீர் மாற்றம் - முடிவெடுக்க வேண்டிய நேரமா?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 2 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 108 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.