தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா களைகட்டியது. அத்தப்பூ கோலத்துடன் வரவேற்பு, செண்டை மேளம், கதகளி நடனம் என, அந்த கல்லூரியே கேரளாவாக மாறி காட்சியளித்தது... ஓணம் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற மாணவிகள், மாவலி மன்னனை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர் மேலும் அத்தப்பூ கோலப்போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்ட வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..