10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வந்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இருவருமே முதல் கணவருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்ணின் 10 வயது மகளுக்கு திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது, பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை செய்த போது,முதல் கணவரின் அக்கா மகனான 15 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, சிறுவன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.