டெலிவரி பாய் ரூபத்தில் திரிந்த `பேய்கள்’ - பின்புலம் தெரிந்ததும் அதிர்ந்த போலீஸ்
உணவு டெலிவரி ஊழியர்கள் போல கஞ்சா விற்பனை-4 பேர் கைது
காஞ்சிபுரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் போல கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது உறுதியான நிலையில், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.