கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் வெற்றி நிச்சயம் திட்டம் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர், மாணவர்கள் கல்வியை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அரசு மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் கூறினார்.