Police issue || ஒரு வேலை சோத்துக்காக..போலீசுக்கே விபூதி அடித்து சிக்கிய முன்னாள் பெண் காவலர்
சென்னையில் தன்னை நீதிபதியின் மகள் எனக் கூறி, உணவு ஆர்டர் செய்து போலீசாரிடம் பில் கட்ட வைத்து ஏமாற்றிய ரேகா என்ற முன்னாள் பெண் காவலர் கைது செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையத்தை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய அப்பெண், தான் நீதிபதியின் மகள் எனவும், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே ஹோட்டலில் தங்கி உள்ள தனக்கு, உணவு ஆர்டர் செய்து தருமாறும் கூறியுள்ளார். பிறகு, உணவை வாங்கி அதற்கான பில்லையும் போலீசார் கட்டினர். சந்தேகமடைந்த போலீசார் விசாரித்ததில், ரேகா கொளத்தூர் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பாரிஸ் எக்ஸ் பனேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில், பணிக்கு செல்லாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.