மதுரையில் Mayonnaise Shawarma சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி..

Update: 2025-05-17 08:53 GMT

மதுரையில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட மயோனைஸ் மூலம் செய்யப்பட்ட ஷவர்மா மற்றும் சிக்கன் சாப்பிட்ட 4 இளைஞர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ், சுரேந்தர், கணேஷ்ராஜா, ஜான் ஆகிய நான்கு பேரும் சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், மயோனைஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ஷவர்மா போன்றவற்றை சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட சூழலில், புகாரின் அடிப்படையில் உணவக நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்