``முதல் நினைவுதினம்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி’’ - பதறவைத்த வீடியோ

Update: 2025-07-02 03:25 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி வாங்க வேண்டும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவடையும் நிலையில் , போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்குவேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சென்னை திருமழிசை பஜனைக் கோயில் தெருவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் விளையாட்டாக தாம் இது போன்ற ஒரு தகவலையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்