FireAccident |சென்னையில் பரபரப்பு - குபுகுபுவென பற்றி எரிந்த குடோன்..ஸ்பாட்டுக்கு விரைந்த 20 லாரிகள்
சென்னை அண்ணா நகரில் பழைய இரும்பு குடோனில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏரிந்து சேதம் அடைந்தன.
அண்ணா நகர் முதலாவது நிழற்சாலையில் 2 கிரவுண்ட் அளவில் உள்ள அந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூடுதலாக 20க்கும் மேற்பட்ட சென்னை குடிநீர் வாரிய லாரிகள் வரவழைக்கப்பட்டன.
அந்த குடோனில் பழைய ஏசி உபகரணங்கள், கேஸ் சிலிண்டர்கள், மின் உபகரணங்கள், காப்பர் கம்பிகள் இருந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்ததால், தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை.
காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தீயை கட்டுக் கொண்டு வருவதற்காக விடிய விடிய போராடினர். குடோனில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.