Cuddalore | பைக் மீது அதிவேகமாக மோதிய கார் - ஸ்பாட்டிலேயே +2 மாணவர் மரணம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர் உயிரிழந்தார். செட்டிப்பட்டறை பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், எதிரே வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் 18 வயதான தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.