Srirangam | Namperumal | விழாக்கோலம் பூண்ட ஸ்ரீரங்கம்.. மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்
திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து பத்தாம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார். மூலஸ்தானத்திலிருந்து வெள்ளி பல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.