Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.12.2025) | 1PM Headlines | ThanthiTV

Update: 2025-12-29 07:55 GMT
  • உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து... ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி...
  • கீழடியில் 11-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... ஜனவரி மாதம் திறந்தவெளி அருங்காட்சியம் திறக்கப்பட்ட பின் அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • திருப்பூரில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெறும் நிலையில், இறுதிகட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது... திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்...
  • வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கத்தில் நாளை காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது... மூன்று லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மருத்துவ முகாம் எல்இடி திரை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, ஒன்றன் பின் ஒன்றாக மோதிய தனியார் பேருந்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன
Tags:    

மேலும் செய்திகள்