Tipperlorry | டிப்பர் லாரி மோதி கோரம் - பைக்கில் சென்றவர் உடல் நசுங்கி பலி
புதுக்கோட்டை - ஆலங்குடி செல்லும் சாலையில் காயம்பட்டி பகுதியில் டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். இதில் மற்றொருவரும் முதலில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உயிர் இருப்பது கண்டறியப்பட்டு மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்த பகுதியில் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.