Snake | வீட்டுக்குள் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்பு.. ஒன்றரை மணி நேரம் வளர்ப்பு நாய் செய்த செயல்

Update: 2025-12-29 03:18 GMT

கடலூரில் வீட்டில் புகுந்த நாகப் பாம்பை, பாம்பு பிடி வீரர் வரும் வரை ஒன்றரை மணிநேரம் நகர விடாமல் பார்த்துக்கொண்ட வளர்ப்பு நாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் வேல்முருகன் என்பவரது வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் வந்து பார்த்த போது, 6 அடி நீளமுள்ள பெரிய நாகப்பாம்பு படம் எடுத்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வன விலங்கு ஆர்வலரான செல்லாவை தொடர்பு கொண்ட போது அவர் வெளியூரில் இருப்பதாகவும், வருவதற்கு ஒன்றரை மணிநேரம் ஆகுமெனவும் கூறியுள்ளார். ஆனால் அதுவரை அந்த பாம்பின் முன்பு குரைத்தபடி நின்றுக்கொண்டிருந்த அந்த வளர்ப்பு நாய், பாம்பை எங்கும் போக விடாமல் பார்த்துக்கொண்டது. பின்பு வந்த செல்லா, நாகப் பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்