விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு - செண்டை மேளம், கரகாட்டங்களுடன் தொடங்கிய பேரணி

Update: 2025-06-04 02:50 GMT

தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளைப்பொருட்களுக்கு உரிய விலை வழங்கிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிட வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, தலைமை தபால் நிலையத்திலிருந்து செண்டை மேளம், கரகாட்டங்களுடன் தொடங்கிய பேரணியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்