சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விருதுநகர் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருதுநகர் காரியாபட்டி சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தவர்களை மருத்துவமனை வளாகத்திற்கு வைத்தே காவல் துறையினர் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதையும் தாண்டி தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நபர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பேச்சுவார்த்தை வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்