பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு - அடித்து நொறுக்கிய பட்டியலின மக்கள்

Update: 2025-07-13 04:12 GMT

பஞ்சமி நிலத்தை மீட்க ஆக்கிரமிப்பை அடித்து நொறுக்கிய பட்டியலின மக்கள்

தேனியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை, அச்சமுகத்தை சாராத தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேனி புதிய பேருந்து நிலையம் அருகே 4 ஏக்கர் பஞ்சமி நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக

பட்டியலின மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாதால், ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள், ஆக்கிரமிப்பு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை பிடுங்கி எரிந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள், அவர்களை தடுக்க முயற்சி செய்ததால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்