கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் உள்ள முருகன் கோயில் பகுதியில் உணவு தேடிவந்த 2 யானைகள் அன்னதானக் கூடத்தை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அச்சமடைந்துள்ள அந்த பகுதி மக்கள் வனத்துறை யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.