மதுபானங்கள் சப்ளை, பார் உரிமம் விவரங்களை சமர்ப்பிக்க ED அறிவுறுத்தல்
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மதுபானங்கள் சப்ளை செய்வது, பார் உரிமம் வழங்கல் உள்ளிட்டவை குறித்து 8 மாவட்டங்களின் விவரங்களை அமலாக்கத்துறையிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருநெல்வேலி, கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய 8 மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் நடக்கும் மதுக்கூடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, வரும் 26ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, மதுபான கடை ஊழியர்கள் கேட்ட மதுபான விபரங்களும், சப்ளை செய்த விபரங்கள் உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.