ED Raid | Chennai | சென்னையில் மீண்டும் களம் இறங்கிய ED... துருவி எடுக்கப்பட்ட ஆவணங்கள்

Update: 2025-09-05 06:08 GMT

அரவிந்த் ரெமிடீஸ் லிமிடெட்டில் வங்கி நிதிகள் கையாடல் - அமலாக்கத்துறை

அரவிந்த் ரெமிடீஸ் லிமிடெட் இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறை, அதனுடன் தொடர்புடைய விளம்பரதாரர் நிறுவனங்களின் 15 லட்சம் பங்குகளை முடக்கினர்.

கடந்த 2 நாட்களாக அரவிந்த் ரெமிடீஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 637 கோடியே 58 லட்சம் வாராக் கடனாக உள்ளதாக தெரியவந்தது.

இது பற்றிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் புகாரின் பேரில், சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

அதில் வங்கி நிதிகள், விளம்பரதாரர்களால் கட்டுப்படுத்தப்படும் ஷெல் நிறுவனங்கள் மூலம் பணம் கடத்தப்பட்டது.

ஷெல் நிறுவனங்களை நிர்வகிக்க, புரோமோட்டர் அரவிந்த் பி.ஷா.வால், புரோக்கர்கள் மூலம் பல போலி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது.

வங்கிகளுக்கு அதிக வருவாய் ஈட்டுவதைக் காட்டுவதற்காக, வங்கி நிதிகள் ஷெல் நிறுவனங்களிடையே சுழற்சி முறையில் பரிமாறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கி கடன்கள், சொத்துகளை மீட்பதைத் தடுக்க குடும்ப உறுப்பினர்கள், தொலைதூர உறவினர்கள் உள்ளிட்டோரின் பெயரில் பல வகையான சொத்துகளை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், விளம்பரதாரர்கள் வைத்திருந்த பல நிறுவனங்களின் சுமார் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத்துறை முடக்கியது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட குற்றம்சாட்டக்கூடிய டிஜிட்டல், ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்