மாணவிகளை சீண்டிய போதை ஆசாமிகள் - ஆத்திரமடைந்த பொதுமக்கள்

Update: 2025-06-21 15:31 GMT

கஞ்சா போதையில் மாணவிகளிடம் இருவர் ரகளை...போலீசில் ஒப்படைப்பு

சேலத்தில், பள்ளி கல்லூரி மாணவிகளிடம் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் நான்கு ரோடு சந்திப்பு அருகே இரண்டு இளைஞர்கள், அவ்வழியாகச் சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசி கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாலு மற்றும் ஆர்யா ஆகிய இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்