Tirupur Bakery | பேக்கரியில் பஜ்ஜிக்கு வெங்காயம் கேட்டு சிறுவனை தாக்கிய ஓட்டுநர் -அதிர்ச்சி சிசிடிவி
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுவனை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுவாய் பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் ரமேஷ். இவரது மகன் சித்தேஷ் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், விடுமுறை தினத்தில் அப்பாவின் பேக்கரிக்கு வந்துள்ளான். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் பஜ்ஜி சாப்பிட, வெங்காயம் கேட்டு சித்தேஷை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஆட்டோ ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.