"FIR-அ தண்ணில போடாம.. ஸ்டெப் எடுங்க.." - தம்பதியை பார்த்த பின் அம்பிகா சொன்ன வார்த்தை

Update: 2025-09-01 04:54 GMT

தண்ணீர் கேட்டவரை தாக்கிய கவுன்சிலர் கணவர்- அம்பிகா ஆறுதல்

கரூர் அருகே கவுன்சிலரின் கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் தம்பதியை நடிகை அம்பிகா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகளூரை சேர்ந்தவர் ரவி. இவர் அந்தப் பகுதியில் 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறி கவுன்சிலர் சபீனாவிடம் முறையிட்டார். அப்போது சபீனாவின் கணவர் நவாஸ்கான், மாமனார் ஜான் பாட்சா, நண்பர் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரவியையும், அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதியை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்