ஒரே வீட்டில் 40 நாய்கள் "ஏரியாவுலே இருக்க மாட்டோம்" வீடுகளை காலிசெய்து ஓடிய மக்கள்

Update: 2025-02-23 08:15 GMT

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அருகே உள்ள இறைவன் நகரில் வசிக்கும் முகமது அலி ஜின்னா என்பவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அளித்தார்

அந்த மனுவில் மாத்தூர் இறைவன் நகரில் வசிக்கும்ஜெயக்குமார் என்பவர் தனது வீட்டில் 40க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார்

அந்த நாய்களை இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலை ஓரத்தில் வந்து நின்று கொண்டு அவளே நடந்து செல்பவர்களை மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் கடிப்பதற்கு பாய்ந்து செல்கிறது

இதனால் அந்த வழியாக செல்ல சிறுவர்கள் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள் எனவே பொது மக்களை அச்சுறுத்தும் அந்த நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்

Tags:    

மேலும் செய்திகள்