திருப்பூர் திமுக எம்எல்ஏ செல்வராஜ் மீது பரபரப்பு புகார்
திருப்பூர் மாநகர பகுதியில் 1 லட்சம் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், திமுக எம்எல்ஏ செல்வராஜ் உள்ளதாகவும், சூர்யா என்ற நபரின் மேல் சந்தேகம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.