Diwali Celebration | தீபாவளி கொண்டாட்ட வெறியில் எதிர் வீட்டுக்காரர் கொடூர கொலை

Update: 2025-10-21 05:48 GMT

பண்ருட்டியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்த வேலு மற்றும் பார்த்திபன் ஆகியோர்களுக்கு இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வேலு, பார்த்திபன் என்பவரை இரும்பு ராடால் தாக்கி உள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட பார்த்திபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய வேலுவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்