தினத்தந்தியின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - ஆர்வமுடன் பங்கேற்ற +2 மாணவர்கள்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், சேலத்தில் தினத்தந்தி நிறுவனம் மற்றும் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ள கல்லூரி கனவு நிகழ்ச்சிக்கு, வெற்றி நிச்சயம் நிகழ்ச்சிதான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்..