கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தினத்தந்தி மற்றும் வசந்த் அண்ட் கோ இணைந்து நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், ஓவியங்கள் தீட்டி பரிசுகள் பெற்றனர். மேலும் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனங்களையும் அரங்கேற்றினர். இந்நிகழ்வில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், வசந்த் அண்ட் கோ நிர்வாகியுமான விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.